ADDED : ஏப் 19, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்,:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செக்கணம், எழுதியாம்பட்டி, மகிளிப்பட்டி, உடைந்தோட்டம், காட்டூர், சேங்கல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். சின்ன ரோஜா, விரிச்சிப்பூ, செண்டுமல்லி, மல்லிகை ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இதில் விரிச்சிப்பூக்கள் கிலோ, 80 ரூபாய், செண்டுமல்லி, 40 ரூபாய், மல்லிகை பூ, 400 ரூபாய், சின்ன ரோஜா, 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. செடிகளில் இருந்து பூக்களை பறித்து கரூர், திருச்சி, முசிறி ஆகிய பகுதிகளில் செயல்படும் பூ மார்க்கெட்டுகளுக்கு கொண்டு
சென்று விற்பனை செய்யப்படுகிறது.
