/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நகை அடமானம் வைத்தரூ.1.95 லட்சம் திருட்டு
/
நகை அடமானம் வைத்தரூ.1.95 லட்சம் திருட்டு
ADDED : ஜன 10, 2025 01:11 AM
குளித்தலை, : வங்கியில் இருந்து எடுத்து வந்த, 1.95 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
குளித்தலை அடுத்த, கழுகூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பன், 65, விவசாய கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் தனது மகள் திருமணத்திற்காக, வங்கியில் சேமித்து வைத்திருந்த, 96 ஆயிரம் ரூபாயை கழுகூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இருந்து எடுத்து வந்தார்.
பின், தோகைமலை ஐ.ஓ.பி., வங்கியில் தனது மனைவியின் நகைகளை வைத்து, 99 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு மதியம், 1:45 மணியளவில் தோகமலை பஸ் ஸ்டாண்ட் ஸ்வீட்ஸ் கடை அருகில், தனது பைக்கில் மஞ்சள் பையில் வைத்திருந்தார். சிறிது நேரத்தில், பையில் வைத்திருந்த, ஒரு லட்சத்து, 95 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து கருப்பன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

