/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி, க.பரமத்தி பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் தொடக்கம்
/
அரவக்குறிச்சி, க.பரமத்தி பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் தொடக்கம்
அரவக்குறிச்சி, க.பரமத்தி பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் தொடக்கம்
அரவக்குறிச்சி, க.பரமத்தி பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் தொடக்கம்
ADDED : ஜன 06, 2024 10:38 AM
கரூர்: சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக, அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் கூட்டு குடிநீர் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து, கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார்.
அப்போது, அவர் கூறியதாவது: அரவக்குறிச்சி மற்றும் கபரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 750 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம், 440.63 கோடி ரூபாயில் ஜல் ஜீவன் நிதி உதவியின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு, 55 லிட்டர் வீதம் கணக்கிடப்பட்டு இடைக்கால மற்றும் உச்சகட்ட குடிநீர் தேவை முறையே, 14.93 மில்லியன் லிட்டர் மற்றும் 1,629 மில்லியன் லிட்டர் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கான நீர் ஆதாரம் காவிரி ஆற்றில் மறவாப்பாளையம், சேமங்கி, செவ்வந்திபாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்பு கிணற்றில் இருந்து பெறப்பட்டு, 14.93 மில்லியன் லிட்டர் நீர் சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. பின், சுத்த நீரானது, 376.19 கி.மீ., நீளமுள்ள பிரதான நீருந்து குழாய்கள் மூலம், 130 தரைமட்ட நீர் தேக்கத் தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பின், பஞ்சாயத்து தரைமட்ட நீர் தேக்க தொட்டிகளிலிருந்து, 7,41,457 கி.மீ., கிளை நீர்உந்து குழாய்கள் மூலம் ஏற்கனவே பயனில் உள்ள, 896 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் மற்றும் புதியதாக அமைக்கப்பட்டுள்ள, 149 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்படுகிறது.
பின்னர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலிருந்து, 1,555.36 கி.மீ நீளமுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கபட உள்ளது.இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், நிர்வாக பொறியாளர்கள் வீராசாமி, லலிதா, உதவி நிர்வாக பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் சிவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.