ADDED : பிப் 01, 2026 08:20 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், 77 வது பிறந்த நாளை யொட்டி, கபடி போட்டி தொடக்க விழா நேற்று சி.எஸ்.ஐ., மைதானத்தில் நடந்தது.
மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். விழாவில், மாவட்ட துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் குமார், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கமலகண்ணன், பகுதி செயலாளர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
