ADDED : மார் 15, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர்- கோவை நெடுஞ்சாலையில், க.பரமத்தி உள்ளது. இந்த பகுதியில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்லுாரிகள், பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. க.பரமத்தியில் இருந்து, வேலை நிமித்தமாக தினமும், 1,000க்கும் மேற்பட்டவர்கள் கரூர் உட்பட பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல, க.பரமத்தி பஸ் நிறுத்தத்திலிருந்து புறப்பட வேண்டும். பகலில் ஒரு சில பஸ்கள் மட்டும், க.பரமத்தியில் நின்று செல்லும். இரவு நேரத்தில் கோவை, திருப்பூர், கரூரில் இருந்து செல்லும் பஸ்கள், க.பரமத்தியில் நிறுத்தப்படுவது இல்லை. இதனால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

