/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்; பல இடங்களில் சிமென்ட் சாலைக்கு தீர்மானம்
/
க.பரமத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்; பல இடங்களில் சிமென்ட் சாலைக்கு தீர்மானம்
க.பரமத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்; பல இடங்களில் சிமென்ட் சாலைக்கு தீர்மானம்
க.பரமத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்; பல இடங்களில் சிமென்ட் சாலைக்கு தீர்மானம்
ADDED : ஆக 28, 2024 07:42 AM
கரூர்: க.பரமத்தி பகுதியில் தேவையான சிமென்ட் சாலை அமைக்க, ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் மார்க்கண்டேயன் தலைமை வகித்தார்.
விவாதத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: கருணாநிதி (தி.மு.க.,): சின்னதாராபுரம் அடுத்த வெங்கடாபுரம் முதல், மல்லாநத்தம் செல்லும் தார்சாலை, வெங்கடாபுரம் பகுதியில் இருந்து கூடலுார் வரை செல்லும் இணைப்பு சாலை உள்பட பல தார்சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நந்தினிசெல்வக்குமார் (அ.தி.மு.க.,): அத்திப்பாளையம் பகுதிக்கு தேவையான குடிநீர் பற்றாக்குறையை போக்க, புதிய போர்வெல் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.மோகன்ராஜ் (தி.மு.க.,): தும்பிவாடி அடுத்த சேங்கலாபுரம் பகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பழுதாகி, பயன்பாட்டில் இல்லாத மேல்நிலைநீர் தேக்க தொட்டி கீழே விழுந்து விபத்து ஏற்படும் முன், அதை அப்புறப்படுத்தி விட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு பேசினர்.முடிவில், புன்னம் பஞ்., பிரேம்நகர் முதலாவது தெருவில் 2,000 லிட்டரில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கவும், சூடாமணி பஞ்., பருத்திக்காட்டுப்பாளையம் காலனியில் நாடகமேடை அமைத்தல், பல்வேறு இடங்களில் சிமென்ட் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட, 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

