/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'கலா உத்சவ்' பொம்மை தயாரிப்பு: முதலிடம் பிடித்த மாணவிக்கு வரவேற்பு
/
'கலா உத்சவ்' பொம்மை தயாரிப்பு: முதலிடம் பிடித்த மாணவிக்கு வரவேற்பு
'கலா உத்சவ்' பொம்மை தயாரிப்பு: முதலிடம் பிடித்த மாணவிக்கு வரவேற்பு
'கலா உத்சவ்' பொம்மை தயாரிப்பு: முதலிடம் பிடித்த மாணவிக்கு வரவேற்பு
ADDED : பிப் 03, 2024 03:39 AM
குளித்தலை: குளித்தலை அரசு மகளிர் மேல்
நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு
படித்து வருபவர் மாணவி தாரிகாஸ்ரீ. இவர், தேசிய அளவில் நடந்த, 'கலா உத்சவ்' பொம்மை தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்றார். இந்த மாணவிக்கும், பயிற்சி ஆசிரியர் கண்மணியையும், டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி பரிசு வழங்கி, பாராட்டினார்.
இதேபோல், அதே பள்ளியில், 11ம் வகுப்பு படித்துவரும் மாணவி, தர்ஷினி, மாநில அளவில் நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, நேற்று காலை, 9:30 மணிக்கு, குளித்தலை பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலையிலிருந்து, பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா தலைமையில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்து, மேளதாளங்களுடன் வரவேற்பு அளித்தனர். நகராட்சி தலைவர் சகுந்தலா, கவுன்சிலர் சையத் உசேன் கலந்து கொண்டனர்.