/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காளியம்மன் கோவில் திருவிழா மஞ்சள் நீராடுதலுடன் நிறைவு
/
காளியம்மன் கோவில் திருவிழா மஞ்சள் நீராடுதலுடன் நிறைவு
காளியம்மன் கோவில் திருவிழா மஞ்சள் நீராடுதலுடன் நிறைவு
காளியம்மன் கோவில் திருவிழா மஞ்சள் நீராடுதலுடன் நிறைவு
ADDED : ஜூலை 18, 2025 02:10 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மேட்டுமருதுார் காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 13ல் தொடங்கியது. அன்று காலை, தீர்த்தக்குடம் எடுத்தல், இரவு கரகம் பாலித்தல், 14ல் சுவாமி சந்து மறித்தல், குட்டிக்காவல் குடித்தல், அக்னிசட்டி, அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 15ல் பொங்கல் வைத்து கெடா வெட்டுதல், இரவு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. 16ல் எருமை கிடா வெட்டி, சுவாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, நேற்று மஞ்சள் நீராடுதலுடன், திருவிழா நிறைவடைந்தது. இரவு கோவில் உதிர்வாய் துடைத்தல் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.