/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காளியம்மன் கோவில் விழா பக்தர்கள் பால்குட ஊர்வலம்
/
காளியம்மன் கோவில் விழா பக்தர்கள் பால்குட ஊர்வலம்
ADDED : ஜூலை 14, 2025 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டு மருதுார் தேவேந்திரகுல தெருவில் மகா காளியம்மன் கோவில் அமைந்-துள்ளது.
இக்கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை, 9:00 மணிக்கு, கிராம மக்கள், பக்தர்கள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மேளதாளம் முழங்க, மருதுார் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, மேட்டு மருதுார் காளி-யம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு மேட்டுமருதுார் கல்லு பாலத்தில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.