/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆதனுாரில் காளியம்மன் கோவில் விழா கோலாகலம்
/
ஆதனுாரில் காளியம்மன் கோவில் விழா கோலாகலம்
ADDED : மே 23, 2025 01:16 AM
தோகைமலை, தோகைமலை அருகே, சிவாயம் ஆதனுாரில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தோகைமலை அருகே சிவாயம் தெற்கு ஊராட்சி ஆதனுாரில், வடக்கு முகம் பார்த்த காளியம்மன் கோவில் உள்ளது. இந்தாண்டு திருவிழாவை முன்னிட்டு, பால்குடம், தீர்த்தக்குடங்களை தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் பக்தர்கள் எடுத்து வந்தனர். மேலும் காளியம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் உள்பட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செய்து வழிபட்டனர்.
பக்தர்கள் சிலர், மாறுவேடங்கள் அணிந்து வீதி, வீதியாக நடனமாடி கோவிலுக்கு வந்தனர். விழாவில், தமிழர்களின் பாரம்பரியமிக்க புராண நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் காளியம்மனை தரிசனம் செய்தனர்.