/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கல்யாண உற்சவம்
/
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கல்யாண உற்சவம்
ADDED : அக் 11, 2024 01:06 AM
கல்யாண வெங்கடரமண சுவாமி
கோவிலில் கல்யாண உற்சவம்
கரூர், அக். 11--
தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் நடந்த, திருக்கல்யாண நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி விழா நடப்பது வழக்கம்.
நடப்பாண்டு கடந்த, 4ல் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்சவர் திரு-வீதி உலா நடந்து வருகிறது. நேற்று மாலை, 4:30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. கல்யாண வெங்கடரமண சுவாமி, திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நிகழ்ச்சியில் கரூர், தான்தோன்றிமலை, சுங்ககேட், பசுபதிபாளையம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாளை (12ம் தேதி) காலை, 9:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.