/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காமராஜர் பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மாலை
/
காமராஜர் பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மாலை
ADDED : ஜூலை 16, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின், 123வது பிறந்த நாள் விழா, கரூரில் நேற்று கொண்டாடப்பட்டது.
கரூர் மனோகரா கார்னரில் உள்ள காமராஜர் சிலைக்கு, கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் மதியழகன் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித் தனர். கரூர் மாவட்ட காங்., கட்சி சார்பில், முன்னாள் மாவட்ட தலைவர் பாங்க் சுப்பிரமணியம் உள்ளிட்ட, நிர்வாகிகள் வெங்கமேட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது, மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன் பாபு உள்ளிட்ட, நிர்வாகிகள்
உடனிருந்தனர்.