/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெரிய மஞ்சவள்ளி பகுதியில் கந்துாரி விழா
/
பெரிய மஞ்சவள்ளி பகுதியில் கந்துாரி விழா
ADDED : பிப் 12, 2025 07:18 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, பெரிய மஞ்சவள்ளி பகுதியில் உள்ள அலிபாமா தர்காவில் கந்துாரி விழா நடைபெற்றது.அரவக்குறிச்சி அருகே, பெரிய மஞ்சவள்ளி கிராமத்தில், புகழ்பெற்ற அலிபாமா தர்கா அடக்கஸ்தலம் உள்ளது. இது, 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
தர்கா புதுப்பிக்கப்பட்டு இந்தாண்டு கந்துாரி விழா நேற்று நடைபெற்றது. பள்ளப்பட்டி, பெரிய மஞ்சவள்ளி, அரவக்குறிச்சி, ஈசநத்தம், சூலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று ஏராளமான பொதுமக்கள் வருகை தந்தனர். குறிப்பாக, 500க்கும் மேற்பட்ட மாற்று மதத்தினர், கந்துாரி விழா உணவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். மத நல்லிணக்கத்தோடு அனைத்து மதத்தினரும் விழாவில் கலந்து கொண்டது அனைவரையும் கவர்ந்தது.

