ADDED : ஜூலை 27, 2025 01:12 AM
கரூர், கரூரில், கார்கில் தின வெற்றி விழா, முப்படை வீரர்களை பாராட்டும் விழா, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளை போற்றும் முப்பெரும் விழா பேரணி நடந்தது.
கரூரில், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில், கார்கில் போர் வெற்றி தின விழா பேரணி, கரூர் சங்க கால புலவர்கள் நினைவு துாண் முன், நேற்று நடந்தது.
அதில், கார்கில் போர் குறித்த பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், மாலை அணிவித்து, பூக்கள் துாவியும் பேரணியாக சென்றனர். தொடர்ந்து, வண்ண வண்ண குடைகளுடன், கரூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, வெற்றி விழா பேரணி சென்றது. நிகழ்ச்சியில், கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ். லயன்ஸ் சங்கங்களின் மாவட்ட ஆளுனர் மணிவண்ணன், தலைவர் சூர்யா கதிரவன், மண்டல தலைவர் பசுபதி, பி.ஆர்.ஓ., மேலை பழனியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

