/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் டிட்டோ-ஜாக் போராட்டம் 988 ஆசிரியர்கள் அனுமதியின்றி விடுப்பு

ADDED : ஜூலை 18, 2025 02:11 AM
கரூர், தமிழகத்தில், தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான, 'டிட்டோ-ஜாக்' சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; அரசாணை, 243ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில், 750 பள்ளிகளில், 2,314 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அதில், 1,152 ஆசிரியர்கள், நேற்று பணியாற்றினர். ஏற்கனவே, 174 ஆசிரியர்கள் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துள்ளனர். 988 ஆசிரியர்கள் அனுமதியின்றி விடுப்பு எடுத்துள்ளனர். ஆசிரியர்கள் விடுப்பு எடுத்ததால், இரு ஆசிரியர் பள்ளிகளில், ஒரு ஆசிரியரே வகுப்பு எடுக்கும் சூழல்
ஏற்பட்டது.
பல இடங்களில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பணியில் உள்ள ஆசிரியர்கள் சமாளிக்க முடியாமல் திணறினர். ஆசிரியர் பயிற்றுனர்களால் பள்ளிகள் செயல்படுத்தப்பட்டன. சில அரசு துவக்க பள்ளிகளில், பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள், அனைத்து வகுப்பு மாணவர்களையும், ஒரே அறையில் அமர வைத்து பாடங்களை நடத்தினர்.