ADDED : ஜூலை 23, 2025 01:41 AM
கரூர், ஆடி பிரதோஷம், அமாவாசையால், வாழைத்தார் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த, 17ல் ஆடி மாதம் தொடங்கியது. தமிழகம் முழுவதும், கடந்த, 20ல் ஆடி கிருத்திகையை ஒட்டி, முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று, ஆடி பிரதோஷத்தையொட்டி சிவன்கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நாளை ஆடி அமாவாசை என்பதால், நேற்று கரூர் மாவட்டத்தில் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்கெட் மற்றும் பல்வேறு பகுதிகளில் வாழைத்தார்களுக்கு கிராக்கி ஏற்பட்டது.
கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார் நேற்று, 450 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 370 ரூபாய்க்கும், கற்பூரவள்ளி, 350 ரூபாயில் இருந்து, 450 ரூபாய்க்கும், பச்சை நாடான் வாழைத்தார், 250 ரூபாயில் இருந்து, 370 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற மொந்தன் வாழைத்தார், 420 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.