/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அமராவதி ராஜ வாய்க்கால் துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
/
கரூர் அமராவதி ராஜ வாய்க்கால் துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
கரூர் அமராவதி ராஜ வாய்க்கால் துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
கரூர் அமராவதி ராஜ வாய்க்கால் துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 29, 2025 01:15 AM
கரூர், மழை காலம் தொடங்கவுள்ள நிலையில், ராஜ வாய்க்காலை துார் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர், அமராவதி ஆற்றின் பிரதான ராஜவாய்க்கால் மூலம், 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக பெரிய அளவில் மழை இல்லை. விரைவில் பருவமழை தொடங்க இருப்பதால், வாய்க்கால் செல்லும் பாதையை துார்வாரினால் மழைநீர் வரும்போது, தடையில்லாமல் செல்ல முடியும். மேலும் ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர், முழுமையாக வாய்க்காலில் சென்று விவசாயத்திற்கு பயன்படும். இதை கருத்தில் கொண்டு விரைவில் துார்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர், வெங்கமேடு பிரிவு, எல்.என்.எஸ். பிரிவு, ஈரோடு ரோடு, கார்னர் மற்றும் பஞ்சமாதேவி பகுதிகளில் பெரிய அளவில் வாய்க்கால் துார்வாராமல் புதர் மண்டிகிடக்கிறது. இதில், பிளாஸ்டிக் உள்பட குப்பை குவிந்து கிடக்கிறது. இதனை சரி செய்தால், மழை வருவதற்கு முன்பாக தண்ணீர் செல்ல ஏதுவாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் செயல்படவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.