/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பரணி பார்க் வித்யாலயா பள்ளி சார்பில் ராணுவ தளபதியிடம் ராக்கி கயிறு ஒப்படைப்பு

ADDED : ஆக 10, 2025 01:25 AM
கரூர் கரூர், பரணி பார்க் வித்யாலயா பள்ளி சார்பில், ராணுவ வீரர்களுக்கு மூன்று லட்சம் ராக்கி கயிறுகள், இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை ராணுவ பயிற்சி மையத்தில், கரூர் பரணி பார்க் வித்யாலயா பள்ளி சார்பில், ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நாடு முழுவதும் சகோதரத்தை போற்றும் ரக் ஷா பந்தன் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஒன்பதாவது ஆண்டாக கரூர் பரணி பார்க் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து தயாரித்த, 18 மொழிகளில் திருக்குறள் பொறிக்கப்பட்ட, 2 லட்சம் ராக்கி கயிறுகள், ஆப்ரேஷன் சிந்துார் ராக்கி கயிறுகள் உள்ளிட்ட மொத்தம், மூன்று லட்சம் ராக்கி கயிறுகளை, பள்ளியின் முதன்மை முதல்வரும், இந்திய பாதுகாப்பு அமைச்சக தேசிய ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினருமான ராமசுப்பிரமணியன் வழங்கினார். அதனை, இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி பெற்றுக் கொண்டார்.