/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பரணி வித்யாலயா பள்ளி ஜூடோவில் 13வது முறை சாம்பியன்
/
கரூர் பரணி வித்யாலயா பள்ளி ஜூடோவில் 13வது முறை சாம்பியன்
கரூர் பரணி வித்யாலயா பள்ளி ஜூடோவில் 13வது முறை சாம்பியன்
கரூர் பரணி வித்யாலயா பள்ளி ஜூடோவில் 13வது முறை சாம்பியன்
ADDED : ஜூலை 17, 2025 02:11 AM
கரூர், கரூர் பரணி வித்யாலயா பள்ளியில், 11 முதல், 13 வரை, இந்திய அரசின் மத்திய கல்வி வாரியம் சார்பில், ஜூடோ விளையாட்டு போட்டி நடந்தது. இதில், தென் மண்டல மாநிலங்களில் இருந்து, 138 பள்ளிகளை சேர்ந்த, 1,000 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 11, 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில், ஆண், பெண் இருபாலரும் சேர்த்து, மொத்தம், 63 எடை பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. அதில், கரூர் பரணி வித்யாலயா பள்ளி, 21 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் வென்று, 155 புள்ளிகள் பெற்று பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்து,
தென் மண்டல சி.பி.எஸ்.இ., ஜூடோ சாம்பியன்ஷிப் கோப்பையை, தொடர்ந்து, 13-வது முறையாக வென்றது. தொடர்ந்து, பரிசளிப்பு விழா நடந்தது. பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன், செயலர் பத்மாவதி தலைமை வகித்தனர். சி.பி.எஸ்.இ., தென் மணடல துணை செயலாளர் பரமசிவன், கரூர் ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி தாளாளர் அசோக் சங்கர், பள்ளி அறங்காவலர் சுபாஷினி, தமிழக உடற்கல்வி தலைமை ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் பரிசு வழங்கினார். இப்போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற, 136 வீரர், வீராங்கனைகள் தென் மண்டல போட்டிக்கு தகுதி பெற்றனர்.
விழாவில், தமிழ்நாடு ஜூடோ சங்க மாநில துணை தலைவர் ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, பரணி பார்க் முதல்வர் சேகர், எம்.குமாரசாமி கல்வியியல் கல்லுாரி முதல்வர் சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

