/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளம் மேடாக காட்சி அளிக்கும் கரூர் பஸ் ஸ்டாண்ட் சாலை
/
பள்ளம் மேடாக காட்சி அளிக்கும் கரூர் பஸ் ஸ்டாண்ட் சாலை
பள்ளம் மேடாக காட்சி அளிக்கும் கரூர் பஸ் ஸ்டாண்ட் சாலை
பள்ளம் மேடாக காட்சி அளிக்கும் கரூர் பஸ் ஸ்டாண்ட் சாலை
ADDED : ஏப் 28, 2024 04:16 AM
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில் சாலை சேதமடைந்துள்ளதால், பஸ்களை இயக்க முடியாமல் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.
கரூர் நகரின் மையப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சேலம், பழநி உள்பட பல்வேறு நகரங்களுக்கு வெளியூர் பஸ்களும், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், வாங்கல், தென்னிலை, சேமூர், குளித்தலை, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் சென்று வருகின்றன.
கொசுவலை, பஸ்பாடி போன்ற முக்கிய தொழில்களை கொண்ட பகுதியாக கரூர் உள்ளது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்காகவும், மற்ற பணிகளுக்காகவும் கரூர் வந்து செல்கின்றனர். மேலும், கரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள், வெளியூர்களுக்கு சென்று திரும்பி வருகின்றனர்.
இங்குள்ள சாலைகள் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பஸ்கள் செல்ல படாதபாடுபட வேண்டி உள்ளது. பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கரூர் பஸ் ஸ்டாண்டில் சாலைகளை சீரமைத்து, பஸ்கள் எளிதாக வந்து செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டிரைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

