ADDED : செப் 02, 2026 06:54 AM

அ நிறம் | அளவு
கரூர்:தான்தோன்றிமலை பஞ்., யூனியன் பகுதிகளில், வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் முத்துக்குமரன் ஆய்வு செய்தார்.
தான்தோன்றிமலை
பஞ்., யூனியன் மூக்காணங்குறிச்சி, காக்காவாடி,
கீழ்பசுபதிபாளையம், குள்ளம்பட்டி, ஆண்டாங்கோவில் கிழக்கு,
ஆண்டாங்கோவில் மேற்கு பகுதிகளில், தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சி
பணிகள் நடந்து வருகிறது. அதில், மூக்காணங்குறிச்சியில், 42.30 லட்ச
ரூபாய் மதிப்பில், கரூர்-ஈசநத்தம் சாலையில் இருந்து, காக்காவாடி பஞ்.,
எல்லை வரை, நிறைவடைந்த சாலை பணியை கலெக்டர் முத்துக்குமரன்
பார்வையிட்டார். அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
