/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கரூர் கலெக்டர் ஆய்வு
/
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கரூர் கலெக்டர் ஆய்வு
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கரூர் கலெக்டர் ஆய்வு
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கரூர் கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 02, 2025 01:37 AM
கிருஷ்ணராயபுரம், இரும்பூதிப்பட்டியில் செயல்பட்டு வரும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், மாவட்ட கலெக்டர் தங்கவேல் கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டார்.
கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக நெல், கொப்பரை, மக்காச்சோளம், எள், நிலக்கடலை, பருத்தி, தேங்காய், மரவள்ளி உள்ளிட்ட விளை பொருட்கள் இடைத்தரகர்களின் தலையீடு இன்றி, விவசாயிகளுக்கு நேரடியாக விற்பனை செய்து கொடுக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனை கூட சேமிப்பு கிடங்குகளில் தங்களது விளை பொருட்களை, மழை காலங்களிலும், விலை வீழ்ச்சி காலங்களிலும் சேமித்து பயன் பெறலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
ஆய்வின் போது மேற்பார்வையாளர் கோகுலப்பிரியா, கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.