/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'அப்டேட்' இல்லாத கரூர் கலெக்டர் இணையதளம் : அரசு நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் இல்லை
/
'அப்டேட்' இல்லாத கரூர் கலெக்டர் இணையதளம் : அரசு நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் இல்லை
'அப்டேட்' இல்லாத கரூர் கலெக்டர் இணையதளம் : அரசு நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் இல்லை
'அப்டேட்' இல்லாத கரூர் கலெக்டர் இணையதளம் : அரசு நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் இல்லை
ADDED : மே 30, 2024 07:08 AM
கரூர் : கரூர் கலெக்டர் அலுவலக இணையளத்தில், 'அப்டேட்' இல்லாததால் தற்போதைய அரசின் நலத்திட்டங்கள் குறித்து தகவல்கள் தெரிவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
தமிழக மாவட்டங்களை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள, இணையதளங்கள் மாவட்டந்தோறும் உருவாக்கப்பட்டு உள்ளன. இணையதளத்தில் மாவட்ட தகவல்கள், வளர்ச்சி திட்டங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த பணிகளை அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, தேசிய தகவல் மையம் செய்து வருகிறது. கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், https://karur.nic.in/ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது. மாவட்டத்தின் வரலாறு, பரப்பளவு, சிறப்பு, முக்கிய இடங்கள், சுற்றுலா தளங்கள், துறைகள் போன்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த இணையதளத்தில், பெரும்பாலான தகவல்களை 'அப்டேட்' செய்யப்படாமல் உள்ளது. கடந்த, 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், மக்கள் நலம் சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை பற்றிய தகவல்களை, கரூர் மாவட்ட இணையதளத்தில் எதையும் குறிப்பிடவில்லை. நெடுஞ்சாலை, பொதுப்பணி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சுகாதாரம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, சுற்றுச்சூழல், வனம் போன்ற பல துறைகளை பற்றி உரிய தகவல்கள் கிடையாது.இணையதளத்தில் அரசு செய்திகள், மாவட்டம் சார்ந்த புள்ளி விபரங்கள் புதுப்பிக்கப்பிடவில்லை. ஒவ்வொரு முறை கலெக்டர் மாற்றத்திற்கு பின், அவரது பெயர், போட்டோ மட்டும் மாற்றம் செய்யப்படுகிறது. 2016-17ம் ஆண்டுக்கு பின் தகவல்களை 'அப்டேட்' செய்யாமல், கடமைக்காக இயங்கி வருகிறது.இது குறித்து கரூர் டி.ஆர்.ஓ., கண்ணன் கூறுகையில், ''தேசிய தகவல் மையம் மூலம், கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், இணையதளத்தை அப்டேட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய அரசு திட்டங்கள் உள்பட அனைத்து தகவல்களும் விரைவில் புதுப்பிக்கப்படும்,'' என்றார்.