ADDED : மார் 08, 2024 07:12 AM
அ நிறம் | அளவு
கரூர் : பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தை கண்டித்து, கரூரில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கரூர் தலைமை தபால் நிலையம் முன், மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர தலைவர் வெங்டேஷ்வரன் தலைமை வகித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்து, தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்ட நன்கொடை விபரத்தை, தர மறுக்கும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சின்னசாமி, கரூர் எம்.பி., ஜோதிமணி, மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன் பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
