/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்ட பூப்பந்தாட்ட அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு
/
கரூர் மாவட்ட பூப்பந்தாட்ட அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு
கரூர் மாவட்ட பூப்பந்தாட்ட அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு
கரூர் மாவட்ட பூப்பந்தாட்ட அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு
ADDED : ஆக 12, 2025 01:09 AM
கரூர், கரூர் மாவட்ட சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் பூப்பந்தாட்ட அணிக்கு, வீரர், வீராங்கனைகள் தேர்வு, முத்தனுாரில் தனியார் பள்ளியில் நேற்று நடந்தது.அதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இறுதியாக, சப்-ஜூனியர் அணிக்கு தலா, 10 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் மதுரையில் வரும், 16, 17ல் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் விளையாடுவர். ஜூனியர் பிரிவில் தலா, 10 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் வரும், 30, 31ல் நடைபெற உள்ள, மாநில போட்டியில் விளையாட உள்ளனர்.இததகவலை, கரூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழக செயலாளர் சிங்காரவேல் தெரிவித்துள்ளார்.