கரூர் மாவட்ட பா.ஜ.,-பொ.செ., விலகல்: அண்ணாமலைக்கு ஆதரவு
கரூர் மாவட்ட பா.ஜ.,-பொ.செ., விலகல்: அண்ணாமலைக்கு ஆதரவு
ADDED : ஜூன் 08, 2026 04:48 AM
கரூர்:கரூர் மாவட்ட, பா.ஜ., பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக செல்வராஜ் கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கரூர்
மாவட்டம், சுக்காலியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 49; கரூர்
மாவட்ட, பா.ஜ., பொதுச்செயலாளர். இவர், நேற்று மாவட்ட
பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, மாநில பா.ஜ., தலைவர்
நயினார் நாகேந்திரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழக
பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய இயக்கத்தை துவக்கியுள்ளார்.
அதில், நான் உறுப்பினராக இணைந்துள்ளேன். இதனால், பா.ஜ.,வில் இருந்து
அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி
விட்டேன். விலகியது குறித்து, கட்சி தலைமைக்கு கடிதம்
அனுப்பிவிட்டேன். அண்ணாமலை மீதுள்ள பற்று மற்றும் ஈர்ப்பின்
காரணமாகவும், தமிழக வளர்ச்சிக்காகவும் அவரது இயக்கத்தில்
இணைந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
