/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
/
கரூர் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கரூர் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கரூர் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ADDED : மே 30, 2025 01:39 AM
கரூர் :கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
இதில், கரூர் எம்.பி., ஜோதிமணி தலைமை வகித்து பேசியதாவது:மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்தும்போது, அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு, முறையாக நிதிகள் சென்று சேர்வதையும், அதன் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதற்காக கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரக குடிநீர் இயக்கம், பாரத பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த, 52 திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
இக்குழு, அனைத்து திட்டப்பணிகளும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். பாரத பிரதமர் ஆதர்ஸ் கிராம யோஜனா, தீன் தயாள் அந்தோதயா யோஜனா, சமூக பாதுகாப்பு திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மகளிர் திட்ட இயக்குனர் பாபு, மாநகராட்சி கமிஷனர் சுதா, குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செழியன் உள்பட பலர் பங்கேற்றனர்.