/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்ட தி.மு.க., சார்பில் ஆண்களுக்கான சிலம்ப போட்டி
/
கரூர் மாவட்ட தி.மு.க., சார்பில் ஆண்களுக்கான சிலம்ப போட்டி
கரூர் மாவட்ட தி.மு.க., சார்பில் ஆண்களுக்கான சிலம்ப போட்டி
கரூர் மாவட்ட தி.மு.க., சார்பில் ஆண்களுக்கான சிலம்ப போட்டி
ADDED : நவ 17, 2025 03:44 AM
கரூர்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, கரூர், திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், மாவட்ட தி.மு.க., சார்பில் ஆண்களுக்கான சிலம்ப போட்டி தொடக்க நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கரூர் தி.மு.க.,-எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். இப்போட்டியில், 14 முதல், 19 வயது வரை உள்ள ஆண்கள் கலந்து கொண்டனர். பொது பிரிவில் வயது வரம்பு இல்லாமல் ஆண்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் முதல் பரிசு, 25,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 20,000, மூன்றாம் பரிசு, 15,000 ரூபாய் என மொத்தம், 7 லட்-சத்து, 20,000 ரூபாய் பரிசு தொகையை வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டனர். முதல் சுற்று நாக் அவுட் முறையில் வெற்றி பெற்ற-வர்களுக்கு பிக்சர்ஸ் போடப்பட்டு தொடர்ந்து போட்டிகள் நடந்-தன.