/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் வட்ட செயற்குழு கூட்டம்
/
அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் வட்ட செயற்குழு கூட்டம்
அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் வட்ட செயற்குழு கூட்டம்
அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் வட்ட செயற்குழு கூட்டம்
ADDED : ஜூலை 24, 2025 01:31 AM
கரூர், கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் வட்ட கிளை செயற்குழு கூட்டம் நடந்தது.
வட்ட தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு, கொளந்தாகவுண்டனுார் முதல் மருத்துவமனை வரை சொல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. உடனடியாக புதிய தார்ச்சாலை அமைத்து, கழிவு நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை மேற்கு நுழைவு வாயில் பகுதியில் உள்ள மண் சாலையை, தார்ச்சாலையாக அமைத்து கொடுக்க வேண்டும்.
மாநகராட்சி சார்பில் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி, இன்று வரை வழங்கி வருகின்றனர். மாநகராட்சிக்கு வழங்கும் வாடகை படியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, சங்கத்தின் புதிய வட்ட செயலாளராக சக்தி, துணை செயலாராக மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், வட்ட செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.