/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஞ்., தலைவருக்கு சுயேட்சைகள் தீவிரம்
/
பஞ்., தலைவருக்கு சுயேட்சைகள் தீவிரம்
ADDED : செப் 24, 2011 11:48 PM
லாலாப்பேட்டை: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணராயபுரம் யூனியன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
சுயேட்சை வேட்பாளர்களும் பஞ்சாயத்து தலைவர் பதவியை பிடிக்கக் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் யூனியன் 23 பஞ்சாயத்துகள் கொண்டது. இதில், யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகள் உள்ளது. இதில் போட்டியிட கிராம பகுதியில் அதிகமான ஆர்வம் மக்களிடம் ஏற்பட்டுள்ளதால் தற்போது யூனியன் பகுதியில் உள்ளாட்சி தேர்தல் களை கட்டியுள்ளது. தற்போது கவுன்சிலர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு கிராம மக்களிடம், தீவிர பிரச்சாரம் செய்ய அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சுயேட்சை வேட்பாளர்களும் துவங்கியுள்ளனர்.

