/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., வேட்பாளரை தடுத்த கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
/
அ.தி.மு.க., வேட்பாளரை தடுத்த கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
அ.தி.மு.க., வேட்பாளரை தடுத்த கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
அ.தி.மு.க., வேட்பாளரை தடுத்த கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
ADDED : செப் 27, 2011 12:03 AM
கரூர்: கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த அ.தி.மு.க., வேட்பாளரை கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் நகராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் நேற்று காலை 12.30 மணிக்கு நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, மாடியில் வேட்புமனு தாக்கல் செய்ய கையில் வேட்புமனுவுடன் வேட்பாளர் செல்வராஜ், அமைச்சர் செந்தில் பாலாஜி பின்னால் நின்று கொண்டிருந்தார். தேர்தல் விதிமுறைப்படி நான்கு பேர் மட்டும் வந்தால் போதும், என சொல்லி விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மாடிக்குச் சென்று விட்டார். அப்போது, அங்கிருந்த மற்ற கட்சி நிர்வாகிகளை கரூர் போலீ ஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ், ஓரமாக செல்லும்படி சொல்லி கொண்டிருந்தார். அப்போது மாடிக்கு செல்ல கையில்வேட்பு மனுவுடன் சென்ற வேட்பாளர் செல்வராஜை, 'மினிஸ்டர் நான்கு பேர் போதும் என சொல் லி விட்டார். நீங்கள் போகக்கூடாது' என இன்ஸ்பெக்டர் முகேஷ் தடுத்தார். அதை கேட்ட வேட்பாளர் செல்வராஜ், 'நான்தாங்க கேன்டிடேட்' என தெரிவித்தார். இதையடுத்து செல்வராஜை மாடிக்குச் செல்ல இன்ஸ்பெக்டர் முகேஷ் அனுமதித்தார். சிறிது நேரத்துக்கு பிறகு மாடிக்கு வந்த இன்ஸ்பெக்டர் முகேஷ், 'கேன்டிடேட்டை நான் சரியா பாக்கலை. 'யாரு கேன்டிடேட்' என அவருக்கு தெரிந்த கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்தார். பின்னர் ஒரு வழியாக அ.தி.மு.க., வேட்பாளர் செல்வராஜூ நன்கு உற்று பார்த்த, இன்ஸ்பெக்டர் முகேஷ் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அ.தி.மு.க., வேட்பாளர் செல்வராஜை தெரியாமல் இன்ஸ்பெக்டர் முகேஷ் தடுத்ததால் சிறிது நேரம் கரூர் நகராட்சி அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.