/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
களத்தில் இறங்கியது ஊழல் எதிர்ப்பு இயக்கம்
/
களத்தில் இறங்கியது ஊழல் எதிர்ப்பு இயக்கம்
ADDED : அக் 04, 2011 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் நகராட்சி தேர்தலில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் முன்னாள் தாசில்தார் உள்பட ஆறு வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
கரூர் நகராட்சி 9 வது வார்டில் மகேஸ்வரன், 13 வது வார்டில் சந்திரசேகரன், 18 வது வார்டில் இளவரசன், 37 வது வார்டில் ஓய்வு பெற்ற தாசில்தார் சாகுல் அமீது, 38 வது வார்டில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வாசுதேவன், 47 வது வார்டில் கார்த்திகேயன் ஆகியோர் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்க மாவட்ட பொறுப்பாளர் வெள்ளியங்கிரி, நிர்வாகி வேல் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

