தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் பா.ம.க., மனு

கரூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் பா.ம.க., மனு

கரூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் பா.ம.க., மனு


ADDED : நவ 08, 2024 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 07:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: பா.ம.க., மாவட்ட நிர்வாகியை தாக்கிய நபர்களை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, கரூர் மாவட்ட பா.ம.க., செயலாளர் பாஸ்கரன் தலைமையில் சென்றவர்கள், கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது: கடலுார் மாவட்டம், புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவர் பா.ம.க.,வை சேர்ந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, 35க்கும் மேற்பட்ட வி.சி.க.,வை சேர்ந்தவர்கள், இவரை கட்டையாலும், மதுபாட்டில்களாலும் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார். செல்லத்துரையை தாக்கும் வீடியோவை, சமூக வலைதளத்தில் அவர்கள் பதிவிட்டுள்ளனர். இது சட்ட விரோத நடவடிக்கையாகும்.தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும். இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை, சட்டப்படி தண்டிக்காமல் விட்டு விட்டால், தவறான முன்னுதாரணமாக மாறி விடும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us