/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அகில இந்திய ஆணழகன் போட்டிக்கு கரூர் அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
/
அகில இந்திய ஆணழகன் போட்டிக்கு கரூர் அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
அகில இந்திய ஆணழகன் போட்டிக்கு கரூர் அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
அகில இந்திய ஆணழகன் போட்டிக்கு கரூர் அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
ADDED : டிச 24, 2024 02:03 AM
கரூர், டிச. 24-
அகில இந்திய ஆணழகன் போட்டிக்கு, கரூர் அரசு கலைக்கல்லுாரி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லுாரிகளுக்கு இடையே, ஆணழகன் போட்டி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரியில் சமீபத்தில் நடந்தது. அதில், 70 கிலோ எடை பிரிவில், கரூர் அரசு கலைக்கல்லுாரி பி.எஸ்.சி., விலங்கியல் முதலாமாண்டு மாணவர் கிருபாகரன் முதலிடம் பிடித்தார். அதன்மூலம், வரும் ஜனவரியில் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற உள்ள, அகில இந்திய ஆணழகன் போட்டிக்கு கிருபாகரன் தகுதி பெற்றுள்ளார்.
தகுதி பெற்ற மாணவர் கிருபாகரனை, கல்லுாரி முதல்வர் வசந்தி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.