/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அரசு மருத்துவ கல்லுாரியில் டிப்ளமோ படிப்பில் சேர அழைப்பு
/
கரூர் அரசு மருத்துவ கல்லுாரியில் டிப்ளமோ படிப்பில் சேர அழைப்பு
கரூர் அரசு மருத்துவ கல்லுாரியில் டிப்ளமோ படிப்பில் சேர அழைப்பு
கரூர் அரசு மருத்துவ கல்லுாரியில் டிப்ளமோ படிப்பில் சேர அழைப்பு
ADDED : அக் 06, 2024 03:08 AM
கரூர்: கரூர் அரசு மருத்துவ கல்லுாரி
யில், முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் என்ற சான்றிதழ் (டிப்ளமோ) படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரிகளிலும், 2024--25ம் கல்வியாண்டு முதல் முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் என்ற, மூன்று மாத கால சான்றிதழ் படிப்பு தொடங்கிட தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சான்றிதழ் படிப்பிற்கு கரூர் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு, 25 இடங்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் படிப்பில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்-றிருக்க வேண்டும். 17 முதல், 32 வயதுக்குள், பட்டியல் வகுப்-பினருக்கு அதிகபட்சமாக, 37 வயதுக்குள் இருக்க வேண்டும். கரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். சேர விருப்பம் உள்ளவர்கள் வரும், 15 மாலை 5:00 மணிக்குள் கரூர் அரசு மருத்துவக்கல்லுாரியில் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.