/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மே 12ல் கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா : அமராவதி கரையோரத்தில் பிளாஸ்டிக் கழிவு

ADDED : மே 10, 2024 07:26 AM
கரூர் : அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில், குவிந்துள்ள குப்பையை அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா, வரும், 12 ம் தேதி தொடங்குகிறது. இதில், உற்சவர் திருவீதி உலா, தேரோட்டம், அலகு குத்துதல், நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கம்பம் அமராவதி ஆற்றுக்கு செல்லுதல் வரும், 29 ல் நடக்கும். அதற்காக, கரூர் அருகே பசுபதிபாளையம் அமராவதி ஆற்றுப்பகுதிகளில், சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. குறிப்பாக, விழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, ஆற்றின் கரையோர பகுதிகளில் விளையாட்டு உபகரணங்கள், உணவு விடுதிகள், விளையாட்டு பொம்மை கடைகள் வைக்கப்பட உள்ளன.
இன்னும், திருவிழா தொடங்க இரண்டு நாட்கள் உள்ள நிலையில் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் தேங்கிய குப்பையை, மாநகராட்சி நிர்வாகம் அகற்றவில்லை. குறிப்பாக, பிளாஸ்டிக் குப்பை அதிகளவில் உள்ளது. இங்கு, விழா ஏற்பாடுகளை செய்ய முடியாத நிலையில் உள்ளது. பிளாஸ்டிக் குப்பையை, கரூர் மாநகராட்சி நிர்வாகம் அகற்றி, சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.