த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்த கரூர் மா.செ., செயலாளர் மாற்றம்
த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்த கரூர் மா.செ., செயலாளர் மாற்றம்
ADDED : மே 14, 2026 06:24 AM
கரூர்: த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்த, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் விஜயபாஸ்கர், கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபையில், த.வெ.க., அரசு போதிய பெரும்பான்மை இல்லாததால், நேற்று நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. அதில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சின் எதிர்ப்பை மீறி, 25 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க., அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதையடுத்து, மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக உள்ள எம்.எல்.ஏ.,க்களை, கட்சி பதவியில் இருந்து நீக்கி, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., நேற்று மாலை அறிவிப்பு
வெளியிட்டார்.
அதில், கரூர் மாவட்ட செயலாளராக இருந்த எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர், அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, கரூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கமலகண்ணன் என்பவரை, நியமனம் செய்து, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவிப்பு
வெளியிட்டுள்ளார்.
