தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ரூ.4,500 கோடியில் உள்கட்டமைப்பு பணி கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தகவல்

ரூ.4,500 கோடியில் உள்கட்டமைப்பு பணி கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தகவல்

ரூ.4,500 கோடியில் உள்கட்டமைப்பு பணி கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தகவல்


ADDED : ஜன 05, 2026 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 07:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: ''மாவட்டத்தில், கடந்த நான்கரை ஆண்டுகளில், 4,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது,'' என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தெரிவித்தார்..

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கரூர் எம்.எல்.ஏ., செந்-தில்பாலாஜி தலைமை வகித்து பேசியதாவது:

கரூர் மாவட்டத்தில் குடிநீர் தொடர்பான பணிக-ளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். இப்பணிகளின் முன்-னேற்றம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்-பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சிகள், டவுன் பஞ்., ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்து பகு-திகளுக்கும் வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு மற்றும் குடிநீரின் தேவைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி-களில் எவ்வித மின் தடையும் இல்லாமல் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திடவும், குடிநீர் குழாய்களில் உடைப்-புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்திட வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்-தப்பட்டுள்ளது.

சாலை, குடிநீர், தெருவிளக்கு, சுகாதார வசதிகள் உள்ளிட்ட பணிகள் நாள்தோறும் முறையாக நடந்து வருகிறதா என்பது குறித்து தொடர்புடைய அலுவலர்கள் தினந்தோறும் ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளவும். மாவட்டத்தில், கடந்த நான்கரை ஆண்டுகளில், 4,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை, குடிநீர், தெருவி-ளக்கு, சுகாதார வசதிகள் உள்ளிட்ட உள்கட்ட-மைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாநகராட்சியில், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடக்கி-றது.இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், கலெக்டர் தங்கவேல், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாம-சுந்தரி, டி.ஆர்.ஓ., விமல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us