/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மனைவியை ஏமாற்றி திருமணம் கணவர் குடும்பத்தின் மீது வழக்கு
/
மனைவியை ஏமாற்றி திருமணம் கணவர் குடும்பத்தின் மீது வழக்கு
மனைவியை ஏமாற்றி திருமணம் கணவர் குடும்பத்தின் மீது வழக்கு
மனைவியை ஏமாற்றி திருமணம் கணவர் குடும்பத்தின் மீது வழக்கு
ADDED : ஜூலை 19, 2011 12:35 AM
குளித்தலை: குளித்தலை அருகே மகிளிப்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம் (27).
அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரி (23) இருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு விக்னேஷ் (3) என்ற மகன் உள்ளார். கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. குளித்தலை சப்கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், முருகானந்தம் கேரளாவுக்கு வேலைக்கு சென்ற போது பென்னி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆறு மாத குழந்தை இருக்கிறது. முருகானந்தம் மற்றும் பென்னி இருவரும் மகிளிப்பட்டிக்கு வந்த தகவல் அறிந்த ஈஸ்வரி தனது கணவரிடம் கேட்டார். அப்போது முருகானந்தம் தகாத வார்த்தைகளால் திட்டி, உன்னை வாழவிட மாட்டேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து குளித்தலை மகளிர் போலீஸில் ஈஸ்வரி புகார் அளித்துள்ளார். குளித்தலை மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம், மாமியார் ராஜம்மாள், இரண்டாவது மனைவி பென்னி, முருகானந்தத்தின் நண்பர்கள் ராஜ்குமார், சண்முகம், மாயா முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.