/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ப்ளஸ் 2 மறு தேர்வுக்கு விண்ணப்பம் அனுப்ப நாளை 12ம் தேதி கடைசி
/
ப்ளஸ் 2 மறு தேர்வுக்கு விண்ணப்பம் அனுப்ப நாளை 12ம் தேதி கடைசி
ப்ளஸ் 2 மறு தேர்வுக்கு விண்ணப்பம் அனுப்ப நாளை 12ம் தேதி கடைசி
ப்ளஸ் 2 மறு தேர்வுக்கு விண்ணப்பம் அனுப்ப நாளை 12ம் தேதி கடைசி
ADDED : ஆக 11, 2011 02:37 AM
கரூர்: ப்ளஸ் 2 மறு தேர்வு எழுத விண்ணப்பம் அனுப்ப நாளையுடன் (12 ம் தேதி) கால அவகாசம் முடிகிறது.
தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் ப்ளஸ் 2 வகுப்புக்கான மறு தேர்வுகள் நடக்கிறது. ஏற்கனவே நடந்த ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், ஒரு பாடத்துக்கு 85 ரூபாயும், இரண்டு பாடங்களுக்கு 135 ரூபாயும், மூன்று பாடங்களுக்கு 185 ரூபாயும், தனித்தேர்வு எழுதுகிறவர்கள் அனைத்து பாடங்களுக்கும் 187 ரூபாயை, மாவட்ட, சார்நிலை கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ' அரசு தேர்வு துறை மண்டல துணை இயக்குநர், 1,ஏ., அரபிக்கல்லூரி, மன்னார்புரம், திருச்சி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், விண்ணப்பத்தோடு, மதிப்பெண் பட்டியல், பணம் செலுத்திய ரசீதும், தனித்தேர்வு எழுதுகிறவர்கள், விண்ணப்பம், மாற்று சான்று மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., மதிப்பெண் பட்டியல்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்ப நாளை (12 ம் தேதி) கடைசி நாள். தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்லூரி அலுவலர் அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.