sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஈழத்தமிழருக்கு நிதி திரட்டும் கரூர் பா.ஜ.,

/

ஈழத்தமிழருக்கு நிதி திரட்டும் கரூர் பா.ஜ.,

ஈழத்தமிழருக்கு நிதி திரட்டும் கரூர் பா.ஜ.,

ஈழத்தமிழருக்கு நிதி திரட்டும் கரூர் பா.ஜ.,


ADDED : ஆக 21, 2011 02:16 AM

Google News

ADDED : ஆக 21, 2011 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: இலங்கைத் தமிழரின் மறுவாழ்வுக்காக கரூரில் நேற்று பா.ஜ.,வினர் நிதி திரட்டினர்.

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடந்த உச்சக்கட்ட போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. போரின்போது இடம் பெயர்ந்த தமிழர்கள், இன்றுவரை முள்வேலி முகாமுக்குள் அடைப்பட்டு கிடக்கின்றனர்.

தமிழர் பகுதிகளின் புனரமைப்பு, மக்களின் மறுவாழ்வுக்காக, பா.ஜ., கட்சியின் சேவா பாரதி அமைப்பு சார்பில், தமிழகம் முழுவதும், 'இலங்கை தமிழர் மறுவாழ்வு நலநிதி' திரட்டப்பட்டு வருகிறது. மாவட்டங்களில் வசூல் செய்யப்படும் நிதி, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது. கரூர் மாவட்டத்தில் நேற்று நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் சிவசாமி தலைமை வகித்தார். கரூர் ஜவஹர் பஜார், பஸ்ஸ்டாண்ட், மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் பா.ஜ.,வினர் நிதி திரட்டினர். மாவட்டச் செயலாளர் கோபி, பொதுச் செயலாளர் சுப்ரமணி, மாநில மகளிரணிச் செயலாளர் கவிதா, மாவட்டத்துணைத் தலைவர்கள் முருகானந்தம், சிவா, நகரத் தலைவர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us