sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொதுமாறுதலை கைவிட வேண்டும் அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

/

பொதுமாறுதலை கைவிட வேண்டும் அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பொதுமாறுதலை கைவிட வேண்டும் அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பொதுமாறுதலை கைவிட வேண்டும் அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை


ADDED : ஆக 30, 2011 12:00 AM

Google News

ADDED : ஆக 30, 2011 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ''தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக என கூறி செய்யப்படும் பொதுமாறுதலை அரசு கை விட வேண்டும்,'' என மாநில முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக அமைப்பு செயலாளர் வள்ளிவேல் தெரிவித்துள்ளார்.

கரூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக வசதி எனக்கூறி ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு அதை கைவிட வேண்டும். மேலும், கவுன்சலிங் நடத்தி, 2,500 க்கும் மேற்பட்ட காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து, நெறிமுறைகளை வெளியிட்டு ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க வேண்டும். ஏற்கனவே ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.



இந்தியாவில் கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பழைய பென்ஷன் திட்டம்தான் நடைமுறையில் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு அரசு ஊழியராக, ஆசிரியராக பணிபுரிந்தவர்களுக்கு பென்ஷன் திட்டம்தான் பாதுகாப்பாக உள்ளது. இதை பல போராட்டங்கள் மூலம் வலியுறுத்தியுள்ளோம். கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இடையே உள்ள ஊதிய விகிதம் களையப்படும். பழைய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என அ.தி. மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி முதல்வர் ஜெயலலிதா, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி, ஊதிய விகிதம் களைதல் மற்றும் பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்துதல் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும்.

தி.மு.க., ஆட்சியின்போது சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. 'புதியதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு தமிழகத்தில் புதியதாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்' என அறிவித்துள்ளது. ஆனா ல், ஆசிரியர்களை புதியதாக தேர் ந்தெடுக்க, தேர்வு நடத்தப்படும் என தெரிகிறது. இதனால் வே லை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு பல ஆண்டுகளாக காத்திருப்பவர்கள் பாதி க்கப்படுவார்கள். எனவே வேø ல வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர் களுக்கு, பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர் வேலை வழங்க வேண்டும்' என முதல்வர் ஜெயலலிதாவை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது, சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பராமன், செயலாளர் முத்தரசப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.








      Dinamalar
      Follow us