sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர், வேலாயுதம்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

/

கரூர், வேலாயுதம்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

கரூர், வேலாயுதம்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

கரூர், வேலாயுதம்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்


ADDED : செப் 01, 2011 11:28 PM

Google News

ADDED : செப் 01, 2011 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மற்றும் வேலாயுதம்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கியூவில் நின்று ஸ்வாமி வழிப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்துக்களின் முதன்மை கடவுளான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று உலகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்டத்தில் இந்து முன்னணி, பா.ஜ., உள்ளிட்ட பொது நல அமைப்புகள் சார்பில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சிலை பிரதிஷ்டை விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.



* வேலாயுதம்பாளைம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலாயுதம்பாளைம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் அலய விழா குழுவினர் வினாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. புகழிமலை ஸ்ரீ உச்சி பிள்ளையாருக்கு சுண்டல் கொலுக்கட்டை படையலுடன் பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சள் உட்பட வாசனை முலிகை பொருட்கள் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனை நடந்தது. வேலாயுதம்பாளையம் கடைவீதி ஸ்ரீ பிள்ளையார் கோவில், காகிதபுரம் ஸ்ரீ வல்லபை கணபதி ஆலயம், ஆகியவற்றிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஷேச பூஜை நடந்தது.








      Dinamalar
      Follow us