/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உள்ளாட்சி தேர்தல் திருவிழா விருப்ப மனு கொடுக்க குவிந்த அ.தி.மு.க.,வினர்
/
உள்ளாட்சி தேர்தல் திருவிழா விருப்ப மனு கொடுக்க குவிந்த அ.தி.மு.க.,வினர்
உள்ளாட்சி தேர்தல் திருவிழா விருப்ப மனு கொடுக்க குவிந்த அ.தி.மு.க.,வினர்
உள்ளாட்சி தேர்தல் திருவிழா விருப்ப மனு கொடுக்க குவிந்த அ.தி.மு.க.,வினர்
ADDED : செப் 03, 2011 12:38 AM
கரூர்: நகராட்சி முதல் பஞ்சாயத்து வரை உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட வி ருப்ப மனு கொடுக்க அ.தி.மு.
க.,வினர் நேற்று கரூரில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வரும் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. 'சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்' என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தத் தேர்தலாக இருந்தாலும் விருப்ப மனுவை முன்கூட்டியே வாங்குவதில் அ.தி.மு.க., முன்னணியில் உள்ளது. அதே போல் மாநிலம் முழுவதும் நேற்று முதல் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளவர்களிடம் அ.தி.மு.க., சார்பில் விருப்ப மனு வாங்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகள், எட்டு பஞ்சாயத்து யூனியன்கள், 11 டவுன் பஞ்சாயத்துகள், 158 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் ஒரு மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள கவுன்சிலர்கள், தலைவர்கள் பதவிகளுக்கு போட்டியிட மனு கொடுக்க நேற்று கரூரில் உள்ள மாவட்ட அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். விருப்ப மனுக்களை மாவட்ட செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அப்போது, மாநில, மாவட்ட அளவிலான அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.