/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு மருத்துவமனை கோவிலில் கோழி தலைகளால் "திகில்' : கண்டுகொள்ளாத மருத்துவ அதிகாரிகள்
/
அரசு மருத்துவமனை கோவிலில் கோழி தலைகளால் "திகில்' : கண்டுகொள்ளாத மருத்துவ அதிகாரிகள்
அரசு மருத்துவமனை கோவிலில் கோழி தலைகளால் "திகில்' : கண்டுகொள்ளாத மருத்துவ அதிகாரிகள்
அரசு மருத்துவமனை கோவிலில் கோழி தலைகளால் "திகில்' : கண்டுகொள்ளாத மருத்துவ அதிகாரிகள்
ADDED : செப் 03, 2011 11:57 PM
கரூர்: அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருப்பண்ண ஸ்வாமிக்கு நேர்த்தி கடன் செலு த்த கோழி பலியிடப்படுகிறது.
பூஜைக்கு பின் கோழி தலைகளை, கோயிலில் உள்ள இரும்பு வேல் முனையில் குத்தி விட் டு சென்று விடுகின்றனர். இதை பார்க்கும் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் திகிலடைகின்றனர். கரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இணை இயக்குநர் அலுவலகம் முன் விநாயகர் கோவில் உள்ளது. முன் புறம் விநாயகர் கோவிலும், பின் புறம் கரு ப்பண்ண சாமி கோவிலும் உள்ளது. மருத்துவமனையில் பிரசவ த்திற்காக அனுமதிக்கப்படும் பெண்களுக்கு நல்ல முறையில் பிரசவம் நடந்தால் விநாயகர் கே õவிலில் சிறப்பு பூஜை, பாலாபிஷேகம் போன்றவற்றை செய்து நேர்த்தி கடன் செய்கின்றனர். அதேபோல், கோவிலின் பின்புறம் உள்ள கருப்பணசாமிக்கு வேண்டுதல் செய்கிறவர்கள் நல்லபடியாக நடக்கும் பிரசவம் மற்றும் பல்வேறு நோய்கள் குணமடைந்தால் கோழிகளை பலியிடுவதாக வேண்டி செல்கின்றனர்.
நோயாளிகளின் வேண்டுதல் நிறைவேறினால், அவர்கள் நேர்த்தி கடனை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலில், கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து எடுத்து சென்கின்றனர். நேர்த்திக்கடனை செலுத்தும் பொது மக்கள் கோவிலில் உள்ள இரும்பு வேல் முனையில்கோழி யின் தலைமை மட்டும் குத்தி விட்டு, அப்படியே விட்டு செல்கின்றனர். இப்படி பல மாதங்களாக நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் கோழித் தலைகளை விட்டு செல்வதால், ரத்தம் தொய்ந்த நிலையில் காய்ந்து போய் வேல் முனையில் தொங்கி கொண்டுள்ள கோழித்தலைகள், மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் என பார்ப்பவர்களை திகிலடைய செய்கிறது. அரசு மருத்துவமனை வளாகத்தில் இப்படி கோழி, சேவல்களை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்துவதை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.

