/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாளை மாவட்ட ஹாக்கி போட்டிமாவட்ட கலெக்டர் அழைப்பு
/
நாளை மாவட்ட ஹாக்கி போட்டிமாவட்ட கலெக்டர் அழைப்பு
ADDED : செப் 12, 2011 02:15 AM
கரூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் நாளை (13 ம் தேதி) நடக்கிறது.
கரூர் கலெக்டர் ÷ஷாபனா வெளியிட்ட அறிக்கை:மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி
நாளை காலை காலை 8.30 மணிக்கு கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி
மைதானத்தில் நடக்கிறது. போட்டியில் ஆண்கள் மட்டும் பங்கேற்க முடியும்.
வயது வரம்பு கிடையாது. போட்டிகள் லீக் முறையில் நடத்தப்படும். மாவட்ட
அளவில் வெற்றிப்பெறும் அணிகள் மண்டல போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.
போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெறும் வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்
வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அணிகள் கண்டிப்பாக அணி மேலாளருடன்
வர வேண்டும். அணி மேலாளர் இல்லாத அணிகள் போட்டியில் பங்கேற்க
அனுமதிக்கப்படாது.கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரியில்
பயிலும் மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை அனுப்பி வைத்து
பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.