sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்தில் ஓட்டுக்கள்எண்ண 21 மையங்கள் அமைப்பு

/

கரூர் மாவட்டத்தில் ஓட்டுக்கள்எண்ண 21 மையங்கள் அமைப்பு

கரூர் மாவட்டத்தில் ஓட்டுக்கள்எண்ண 21 மையங்கள் அமைப்பு

கரூர் மாவட்டத்தில் ஓட்டுக்கள்எண்ண 21 மையங்கள் அமைப்பு


ADDED : அக் 05, 2011 01:11 AM

Google News

ADDED : அக் 05, 2011 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 21 மையங்களில் உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது.கரூர் மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகள், எட்டு பஞ்சாயத்து யூனியன், 11 டவுன் பஞ்சாயத்து, 157 கிராம பஞ்சாயத்து மற்றும் ஒரு மாவட்ட பஞ்சாயத்து உள்ளது. மொத்தமுள்ள 1,941 பதவிகளில் 375 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 1,566 பதவிகளுக்கு வரும் 17 மற்றும் 19 ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.தாந்தோணி பஞ்சாயத்து யூனியனுக்கு, தாந்தோணி அரசு கலைக்கல்லூரி, அரவக்குறிச்சி யூனியனுக்கு தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி, க.பரமத்தி யூனியனுக்கு க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி, குளித்தலை யூனியனுக்கு குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு புலியூர் கவுண்டம்பாளையம் எம்.ஏ.எம்., ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளி, கடவூர் யூனியனுக்கு பி.உடையாப்பட்டி மாரிஸ்ட் மேல்நிலைப்பள்ளி, தோகமலை யூனியனுக்கு தோகமலை செர்வைட் மகளிர் கல்வியியல் கல்லூரி, கரூர் யூனியனுக்கு கரூர் கொங்கு கலைக்கல்லூரியிலும் ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது.

காகித ஆலை, புஞ்சை தோட்டக்குறிச்சி, புஞ்சை புகளூர் ஆகிய டவுன் பஞ்சாயத்துகளுக்கு புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், புலியூர், உப்பிடமங்கலம், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி ஆகிய டவுன் பஞ்சாயத்துகளுக்கு கரூர் பசுபதிபாளையம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், மருதூர், கிருஷ்ணராயபுரம், நங்கவரம் ஆகிய டவுன் பஞ்சாயத்துகளுக்கு மாயனூர் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. குளித்தலை நகராட்சிக்கு குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கரூர் நகராட்சிக்கு கரூர் அரசு கலைக்கல்லாரியிலும் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us