sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிருஷ்ணராயபுரம் விவசாயிகள் ஆர்வம் மண்வள பாதிப்பை தடுக்க அவுரி செடி சாகுபடி அதிகம்

/

கிருஷ்ணராயபுரம் விவசாயிகள் ஆர்வம் மண்வள பாதிப்பை தடுக்க அவுரி செடி சாகுபடி அதிகம்

கிருஷ்ணராயபுரம் விவசாயிகள் ஆர்வம் மண்வள பாதிப்பை தடுக்க அவுரி செடி சாகுபடி அதிகம்

கிருஷ்ணராயபுரம் விவசாயிகள் ஆர்வம் மண்வள பாதிப்பை தடுக்க அவுரி செடி சாகுபடி அதிகம்


ADDED : அக் 05, 2011 01:12 AM

Google News

ADDED : அக் 05, 2011 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாலாப்பேட்டை: கிருஷ்ணராய புரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நெல்சாகுபடி செய்வதற்கு வசதியாக மண்வளம் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கை உரம் தாவரமான அவுரி செடி வளர்ப்பு சாகுபடி அதிகரித்துள்ளது.கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளான கிருஷ்ணராயபுரம், கோõவகுளம், புதுப்பட்டி, கட்டளை, ரங்கநாதபுரம், மகாதானபுரம் ஆகி ய பகுதி விவசாய நிலங்களில் திருந்திய நெல் சாகுபடி செய்ய தீர்மானிக்கப்பட்டு, அதற்கான முதற்கட்ட பணிகளான மண் வளம் பாதுகாக்க இயற்கை உர தாவரமான அவுரி செடி வகை நிலங்களில் தெளிக்கப்பட்டு, அதனை நன்றாக வளர்ந்த பின், அடி உரமாக மண்ணுடன் உழவு செய்யப்படுகின்றது.

இதன்மூலம் நெல் சாகுபடி பயிருக்கு ரசாயனம் உரமான யூரியா தேவை அதிகமாக பயன்படுத்துவது தவிர்க்கப்படுவதுடன் இயற்கை உரமான அவுரி செடி மூலம் நிலத்துக்கு தேவையான தழைச்சத்து கிடைக்கின்றது. மேலும் இயற்கை உரமான அவுரி செடி மூலம் நிலத்துக்கு தேவையான தழைச்சத்து கிடைக்கின்றது.மேலும், இந்த இயற்கை விவசாயம் மூலம் நெல் மகசூல் சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் 'கிருஷ்ணராயபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான விளைநிலங்களில் அவுரி செடி வளர்ப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' என விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us