sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவை தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கு போலீஸ் காவல் மனு தள்ளுபடி

/

அரவை தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கு போலீஸ் காவல் மனு தள்ளுபடி

அரவை தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கு போலீஸ் காவல் மனு தள்ளுபடி

அரவை தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கு போலீஸ் காவல் மனு தள்ளுபடி


ADDED : அக் 05, 2011 01:13 AM

Google News

ADDED : அக் 05, 2011 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நெருர் ஆற்றுப்பகுதியில் தனியார் நிலத்தில் அரசு அனுமதி பெறாமல் மணல் அள்ளியதாக அரவக்குறிச்சி தி.மு.க., எம்.எல்.ஏ., மீது போடப்பட்ட இரண்டாவது வழக்கில் அவரை போலீஸ் காவலில் அனுப்பகோரிய மனுவை கரூர் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., பழனிசாமி மீது, மாயனூர் ஆற்றுப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளியதாக வி.ஏ.ஓ., நீலமேகம் மாயனூர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து கடந்த மாதம் 19 ம் தேதி பழனிசாமி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நெரூர் வடபாகம் பகுதியில் ராமசாமி அய்யர், முத்தையா என்பவருக்கு சொந்தமான இடத்தில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 15 ம் தேதி அரசு அனுமதி பெறாமல் மணல் அள்ளியதாக தி.மு.க., எம்.எல்.ஏ., பழனிசாமி, சுந்தரேசன், கிரிராஜ் உள்பட பலர் மீது வி.ஏ.ஓ., தங்கராஜ் கடந்த 30ம் தேதி புகார் கொடுத்தார்.இதையடுத்து மாயனூர் காவிரியாற்றில் மணல் அள்ளிய வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள பழனிசாமியை போலீஸார் பலத்த பாதுகாப்போடு, கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 2ம் தேதி ஆஜர்படுத்தினர். அவரை வரும் 14 ம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் அனுராதா உத்தரவிட்டார். இதையடுத்து பழனிசாமியை திருச்சி மத்திய சிறைக்கு போலீஸார் அழைத்து சென்றனர்.இரண்டாவது வழக்கில் எம்.எல்.ஏ., பழனிசாமிக்கு மூன்று நாள் போலீஸ் காவல் கேட்டு, வாங்கல் போலீஸார் நேற்று கரூர் கோர்ட்டில் மனு செய்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ., பழனிசாமியை, திருச்சி சிறையில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு கரூர் கோர்ட்டுக்கு போலீஸார் அழைத்து வந்தனர்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரே ட் அனுராதா, 'பழனிசாமியை போலீ ஸ் காவலில் அனுப்ப முடியாது' என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.இதையடுத்து எம்.எல்.ஏ., பழனிசாமியை போலீஸார் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us