sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு தொண்டை ஆப்ரேஷன்

/

குளித்தலை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு தொண்டை ஆப்ரேஷன்

குளித்தலை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு தொண்டை ஆப்ரேஷன்

குளித்தலை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு தொண்டை ஆப்ரேஷன்


ADDED : அக் 12, 2011 11:41 PM

Google News

ADDED : அக் 12, 2011 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: தாலுகா அளவிலான குளித்தலை அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு தொண்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.குளித்தலை கோட்டமேட்டு பகுதியை சேர்ந்தவர் சாந்தி (30) விவசாய கூலி தொழிலாளி.

இவருக்கு கடந்த ஆறு மாதமாக தொண்டை வலி, காதுவலி, சாப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டு உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாந்திக்கு பரிசோதனை செய்த போது, தொண்டையில் சதை வளர்ச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனால் சாந்திக்கு, மருத்துவமனை தலைமை மருத்து அதிகாரி மனோன்மணி உத்தரவின்பேரில் மயக்க மருத்துவ வல்லுநர் டாக்டர் கோபிநாத் ஒத்துழைப்புடன் காது, மூக்கு, தொண்டை மருத்துவ வல்லுநர் டாக்டர் செந்தில்குமார் அறுவை சிகிச்சை செ ய்தார். இதையடுத்து சாந்தி தற்போது குணமடைந்து வருகிறார்.பொதுவாக மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில்தான் தொண்டை, கா து, மூக்கில் ஏற்படும் நோய்களு க்கு அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆனால் தாலுகா அளவி ல் உள்ள குளித்தலை அரசு மருத்துவமனையில்தொண்டைஅறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.இதனால், அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு, 'உள் மற்றும் வெளி நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் ரமணி முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us